Header Ads

வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்ட கங்குலி தொடர்பில் வெளியாகிய தகவல்



இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவரும் முன்னாள் இந்திய அணித் தலைவருமான சௌரவ் கங்குலி திடீர் சுகவீனமுற்று கொல்கத்தா வைத்தியசாலையில் சிகச்சை பெற்றுவந்தார்.

இன்று அவர் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய கங்குலி அங்கு கூடியிருந்த செய்தியாளர்களை சந்தித்து நான் மிகவும் நலமாக இருக்கின்றேன்.

எனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கும் தாதிமார்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய ஏனையவர்களுக்கும் நன்றி தெரிவிக்கின்றேன் என கூறியுள்ளார்.

சௌரவ் கங்குலி கடந்த சனிக்கிழமை காலையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது சுகவீனமுற்று கொல்கத்தாவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த 3 அடைப்புகளில் ஓர் அடைப்பு அன்றைய தினமே ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் நீக்கப்பட்டது.

மற்றைய இரண்டு அடைப்புகளை நீக்குவது குறித்து பின்னர் தீர்மானிக்கப்படவுள்ளது.

வைத்தியசாலையிலிருந்து இன்று வீடு திரும்பிய 48 வயதான கங்குலி, கண்காணிப்பில் இருப்பார் என அவருக்கு சிகிச்சை அளித்த வைத்தியசாலை நிருவாகம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.