Header Ads

அடுத்த வருட ஐபிஎல் CSK-வின் நிலை..? பிசிசிஐ தலைவரான கங்குலி

 


ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரி, டோனி தலைமையிலான சென்னை அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

மேலும் பிளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெறவில்லை இதற்கு அணியில் இருக்கும் மூத்த வீரர்களே காரணம் என்று சொல்லப்பட்டது.

இதையடுத்து அடுத்த வருட ஐபிஎல்லில் ஒரு புதிய சென்னை அணியை பார்க்கலாம், நிச்சயமாக நான் அடுத்த ஆண்டு விளையாடுவேன் என்று தொடரில் இருந்து வெளியேறுவதற்கு முன் டோனி பேட்டி கொடுத்திருந்தார்.

இதனால் அடுத்தாண்டு, ஒரு இளம் சென்னை அணியை பார்க்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அடுத்தாண்டு இரண்டு புதிய அணிகள் அறிமுகப்படுத்தப்படுவதால் பெரிய ஏலம் விடப்படும்.

இதனால் அணியில் தக்க வைக்கப்பட்டிருக்கும் வீரர்கள் சிலர் கழற்றிவிடப்படுவர் என்று கூறப்பட்டது.

இதை வைத்து டோனி, நல்ல வீரர்களை, குறிப்பாக மும்பை அணியில் இருக்கும் சில வீரர்களை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என்று திட்டம் வைத்திருப்பதாக செய்தி வெளியானது.

ஆனால் தற்போது பெரிய ஏலம் நடக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் ஐபிஎல்லில் புதிய அணிகள் இணைக்கப்படாது என்றும் 2 புதிய அணிகள் 2022ல்தான் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பிசிசிஐ தலைவரான கங்குலியின் முடிவு தான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.