Header Ads

குழந்தை பிறப்பதற்காக நாடு திரும்பிய விராட் கோஹ்லி! சுனில் கவாஸ்கர் அதிருப்தி

 


கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று தொடர்களில் விளையாடி வருகிறது.

இதில் ஒருநாள் தொடரை அவுஸ்திரேலியா அணியும், டி20 தொடரை இந்திய அணியும் கைப்பற்றியது.

இதையடுத்து இரு அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா மோசமாக தோல்வியடைந்ததால், கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

இதற்கிடையில் கோஹ்லி, குழந்தை பிறக்கவுள்ளதால், 2-வது மற்றும் 3-வது போட்டியில் கலந்து கொள்ளாமல் நாடு திரும்புகிறார்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், இந்திய அணிக்கு புதிதாக வந்தவர் தங்கராசு நடராஜன்டி20-யில் மிகப்பிரமாதமாக ஆடினார்.

ஐபிஎல் தொடரின் போதுதான், நடராஜனும் தன் முதல் குழந்தைக்குத் தந்தையானார்.

ஆனால், அவர் தன் குழந்தையை பார்க்க உடனடியாக நாடு திரும்பவில்லை.

ஐபிஎல் தொடர் முடிந்து அமீரகத்திலிருந்து நடராஜன் நேரடியாக அவுஸ்திரேலியா சென்றார்.

நடராஜனின் அபாரமான பந்து வீச்சைப் பார்த்த பிறகு டெஸ்ட் தொடருக்காக அவரை அங்கேயே தங்க வைத்தனர்.

அணியில் விளையாடுவதற்காக அல்ல. வலை பயிற்சியில் அவர் பந்து வீசிக் கொண்டிருக்கிறார்.

மேட்ச் வின்னரான அவர் இப்போது வலைப்பந்து வீச்சாளராக இருக்கிறார்.

அவுஸ்திரேலியா தொடர் முடிந்த பிறகே நடராஜன் இந்தியா வந்து தன் முதல் குழந்தையை, முதல் முறையாகப் பார்க்க உள்ளார்.

ஆனால் , கேப்டன் முதல் டெஸ்ட் முடிந்தவுடன் தன்னுடைய முதல் குழந்தைப் பிறப்புக்காக நாடு திரும்புகிறார்.

இதுதான் இந்திய கிரிக்கெட் வாரியம்.

ஒருவருக்கு ஒரு விதி, இன்னொரு வீரருக்கோ மற்றொரு விதி.

நீங்கள் என்னை நம்பவில்லை என்றால், ரவிச்சந்திரன் அஸ்வினை, நடராஜனை கேட்டு பாருங்கள் என்று கடுமையாக சாடியுள்ளார்.

No comments

Powered by Blogger.