Header Ads

ஐ.பி.எல் தொடரில் இருந்து நீக்கப்படும் CSK அணி வீரர்கள்!!



 இந்தியாவில் நடைபெற்று வரும் 2021 ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம், அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

இதனால் அணியில் இருந்து நீக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிடுவதற்கு இன்றே கடைசி நாள் என்பதால், அந்தந்த அணியை சேர்ந்த நிர்வாகம், தங்கள் அணியில் இருந்து நீக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னை அணி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவின் முரளிவிஜய், அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன், இந்திய வீரர் பியூஸ் சாவ்லா, முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், மோனு சிங், கீதர் ஜாதவ் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இதில் சின்ன தல என்று சென்னை ரசிகர்களால் அழைக்கப்படும் ரெய்னாவின் பெயர் இல்லாததால், ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

No comments

Powered by Blogger.