இந்திய அணிக்கு கெவின் பீட்டர்சன் எச்சரிக்கை விடுப்பு
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடியதில் ஒருநாள் தொடரை 1-2 என இழந்த போதும், டி20 தொடரை 2-1 என வென்றது, மேலும் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்தது.
இந்த வெற்றியை இந்திய அணியினரும் ரசிகர்களும் தொடர்ந்து கொண்டாடி வருவதால் இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், ட்விட்டரில் ஒரு விடயம் குறித்து பதிவேற்றியுள்ளார்.
அதில் பல தடைகளைத் தாண்டி கிடைத்த இந்த வெற்றியை கொண்டாடுங்கள் இந்தியா.
எனினும் உண்மையான அணி இன்னும் சில நாட்களில் இந்தியாவுக்கு வரவுள்ளது.
அவர்களை நீங்கள் தோற்கடித்தாக வேண்டும். எச்சரிக்கையுடன் இருங்கள்.
அடுத்த இரு வாரங்களுக்கு அதிகமாகக் கொண்டாடுவதைத் தவிர்த்து போட்டிகளுக்கு தயாராகுங்கள் என்று கூறியுள்ளார்.
No comments